மீண்டு வா நண்பா... உயிருக்கு போராடும் தமிழ் நடிகருக்கு நடிகர் தனுஷ் உருக்கம்..!
Dinamaalai August 12, 2025 04:48 PM


 
தமிழ் சினிமாவின் முண்ணனி நடிகர்களில் ஒருவரான 'தனுஷுடன் துள்ளுவதோ இளமை' படத்தில்  அவருடன் இணைந்து அறிமுகமானவர் அபிநய் கிங்கர். இந்த படத்திற்கு பிறகு   ஜங்ஷன், சிங்கார சென்னை, பொன் மேகலை ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தார். சக்சஸ், தாஸ், தொடக்கம், சொல்ல சொல்ல இனிக்கும், 'பாலைவனச் சோலை 2, ஆறுமுகம், கார்த்திக் அனிதா, கதை, 'ஆரோகணம்', என்றென்றும் புன்னகை, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படங்களிலும்  குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.


43 வயதான அபிநய்க்கு கல்லீரல் தொற்று பிரச்சனையால் பாதிக்கப்பட்டு   தனியார் மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறார். குடும்பத்தின் வறுமையால் அபிநய் திருமணம் செய்து கொள்ளவில்லை.  

இந்நிலையில் அபிநய், கல்லீரல் முற்றிலும் பாதிக்கப்பட்டு சீரிஸாக இருக்கிறார். உதவிக்கு கூட ஆள் இல்லாமல், தனியாக கிடக்கும் அவருக்கு எப்போது வேண்டுமானாலும் உயிர்போகும் என்ற பரிதாப நிலையில் இருந்து வருகிறார்.  இந்நிலையில், நடிகர் தனுஷ் அபிநய்யின் மருத்துவச் செலவுக்கு ₹5 லட்சம் கொடுத்துள்ளார்.   நடிகர் தனுஷ், 'நண்பா மீண்டும் வந்துவிடுவாய்' என ஆறுதல் கூறியிருக்கிறார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.