சான் ஏறி முழம் சறுக்கும் என்று பழமொழி ஒன்று சொல்வார்களே, அதற்கு எதிர்மாறாக தங்கம் விலை முழம் ஏறி, சான் சறுக்கிறது என்றே சொல்லலாம். அதாவது, விலை ஏறும்போது அதிகமாக ஏறுகிறது. ஆனால், குறையும்போது சற்றே விலை குறைகிறது. இதுதான் தங்கம் விலையில் தொடர் கதையாக நடக்கிறது.
கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.25 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.9445க்கும், சவரனுக்கு ரூ.200 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.75,560க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று ஆகஸ்ட் 11ஆம் தேதி 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.70 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.9,375க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.75,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 குறைந்து, ஒரு பவுன் ரூ.74,360 கும், ஒரு கிராம் ரூ.9,295-க்கும் விற்பனை ஆனது. அதே நேரத்தில், ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது.