Breaking: பாஜக கூட்டணிக்கு வர மீண்டும் ஓபிஎஸ்-இடம் யாரும் பேசவில்லை… டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி..!!!
SeithiSolai Tamil August 12, 2025 07:48 PM

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் விலக வேண்டிய முடிவை எடுத்திருப்பது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளதாவது, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் விலகியது தனிப்பட்ட முறையில் மிகவும் வருத்தம் அளிக்க கூடியதாகும்.

ஓபிஎஸ்-ஐ மீண்டும் கூட்டணிக்கு அழைத்து வர பாஜக முயற்சிக்கவில்லை. அவர் இரு முறை பிரதமர் மோடியை சந்திக்க கடிதம் அனுப்பி இருந்த போதும் கடைசி வரை மோடியை சந்திக்க ஒப்புதல் வழங்கப்படவில்லை.

மேலும் தமிழகம் வந்த தேசிய பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷை சந்திக்க வருமாறு ஓபிஎஸ்-க்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதனை ஓபிஎஸ் தன்னிடம் தெரிவித்துள்ளார்.

அவரை டெல்லியில் உள்ள பாஜக தலைவர்கள் தான் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் படுத்த வேண்டும். மீண்டும் கூட்டணிக்கு ஓ. பன்னீர்செல்வம் வருவார் என நம்புகிறேன் இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.