தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூரில் மதிமுக சார்பில் நடைபெற்ற “மதச்சார்பின்மையும், கூட்டாட்சியும்” என்ற பொதுக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது, தமிழகத்தில் இந்து- முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்க பாஜக முயற்சி செய்து வருகிறது.
மதிமுக கட்சி ஒருபோதும் பதவிக்காக கூட்டணி வைப்பது கிடையாது. கொள்கைக்காகவே கூட்டணி வைத்துள்ளோம். இந்தியாவை மதச்சார்பின்மை தான் வளர்க்கும்.
தமிழகத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கான முயற்சியையும் பாஜக மேற்கொண்டு வருகிறது. இன்று வரையில் மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை தொடர்ந்து மறுத்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சியை பிற மாநிலங்களும் செயல்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர் என பேசினார்.