பழைய ஓய்வூதிய திட்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை... நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!
Dinamaalai August 12, 2025 08:48 PM

 


மத்திய அரசுப் பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தும் திட்டம் இல்லை என நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன்  திட்டவட்டமாக தெரிவித்தார். தற்போது தேசிய ஓய்வூதியத் திட்டம்  தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது.  இது அரசுப் பணியாளர்களுக்கு நிதி பாதுகாப்பு மற்றும் சந்தை அடிப்படையிலான வருவாயை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக  அவர் வலியுறுத்தினார்.


மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், “பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவருவதற்கு அரசு எந்தவித திட்டமும் வைத்திருக்கவில்லை. NPS ஒரு நன்கு வடிவமைக்கப்பட்ட திட்டமாகும். இது ஓய்வூதியப் பலன்களை உறுதி செய்வதோடு, நிதி நிலைத்தன்மையையும் பராமரிக்கிறது” எனக் கூறியுள்ளார்.  பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது நிதி ரீதியாக நிலையானதாக இருக்காது  இது அரசின் நிதி நிலையை பாதிக்கும் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.  

இது குறித்து மேலும் நிர்மலா சீதாராமன்  “NPS திட்டம் 2004 முதல் அமலில் உள்ளது. இது பணியாளர்களுக்கு ஓய்வுக்குப் பிந்தைய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சந்தை அடிப்படையிலான முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகிறது. இதுவரை 81.47 லட்சம் பணியாளர்கள் இந்தத் திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். மேலும் இதன் மொத்த சந்தை மதிப்பு ரூ.12.24 லட்சம் கோடியாக உள்ளது,” என கூறியுள்ளார்.   பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறுவது குறித்து  “மாநில அரசுகளுக்கு அவர்களின் நிதி நிலைமையைப் பொறுத்து முடிவெடுக்க உரிமை உள்ளது. ஆனால், மத்திய  அரசு NPS-ஐ ஒரு நிலையான மற்றும் நவீன தீர்வாக கருதுகிறது,” என பதில் அளித்துள்ளார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.