Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
ராஜி இன்னைக்கு எனக்காக வந்த நீங்க. பின்னாடி போயிடக்கூடாது. அதுமட்டும் எனக்காக செய்யுங்க என்கிறார். முத்துவேல் மற்றும் வடிவு எதுவும் பேசாமல் அவர்கள் வீட்டிற்கு சென்று விடுகின்றனர். வீட்டிற்குள் இருந்து கதிர் வெளியில் வராமல் இருக்க மீனா அவரை பார்க்க செல்கிறார். அங்கு ரூமில் கதிர் ஜாலியாக இருப்பதை பார்க்கும் மீனா சிரிக்கிறார்.
பின்னர் கடுப்பில் ரூமிற்குள் வரும் ராஜி என்னை துரத்திவிட்டுட்டு நீ ஜாலியா இருக்கலாம்னு நினைச்சியா. நான் ஒன்னும் உனக்கு சப்போர்ட் செஞ்சு சொல்லலை. உன்ன நிம்மதியா இருக்க விடக்கூடாதுனு தான் சொன்னேன் என்கிறார்.
வீட்டில் எல்லாரும் இருக்க சக்திவேல் அப்போ இனி ராஜி விஷயம் என்ன எனக் கேட்கிறார். அப்பத்தா இப்போ என்ன அதை பத்தி அவள் தான் சொல்லியாச்சே எனக் கூற அவ அப்படித்தான் சொல்லுவா. வீட்டுக்குள்ள போய் அடிச்சு அழைச்சிட்டு வந்தா எனச் சொல்ல போக முத்துவேல் நீ வாயை மூடு. அவளை பத்தி இனிமே எதுவும் சொல்லாதே எனக் கூறிவிடுகிறார்.
சக்திவேல் வடிவுவிடம் திரும்பி கேட்க அவ எப்படி இருப்பாளோ என சந்தேகத்தில் தான் பேசினேன். ஆனால் எப்போ அவ கதிருடன் சந்தோஷமா இருக்கேனு சொல்லிட்டாளோ. இனிமே இதை பத்தி பேச வேண்டாம் எனக் கூறிவிடுகிறார்.
எல்லாரும் சக்திவேலை திட்டி விட்டு உள்ளே செல்ல குமாரிடம் பேச அவரோ எனக்கு தலைவலி என எழுந்து சென்று விடுகிறார். இவனும் அந்த கூட்டத்தில் சேர்ந்துட்டானோ எனக் கேட்க அதெல்லாம் இருக்காது என அவரே மனதை சரி செய்து கொள்கிறார்.
வாசலில் ராஜி கடுப்புடன் உட்கார்ந்து இருக்க அங்கு வரும் மீனா ஏன் இப்படி இருக்க எனக் கேட்க கதிர் என்னை உன் இஷ்டம் என சொல்லிட்டான் என்கிறார். சரி நீ ஏன் அதுக்கு இப்படி இருக்கனு கேட்க அவனை விரும்பி தொலைஞ்சிட்டேனே எனக் கத்த மீனா சிரிக்கிறார்.
பின்னர் ரூமில் கதிர் சிரித்து ஆடிக்கொண்டதை ராஜியிடம் சொல்ல அவனுக்கு உன்னை போகாதேனு சொல்ல ஆசை இருந்து இருக்கும். ஆனால் வாயில் வந்து இருக்காது என்கிறார். பாண்டியன் குடும்பத்தினரை அழைத்து நாளை குமாருடனான கேஸ் கோர்ட்டுக்கு வருவதாக சொல்கிறார்.
அரசி நீங்க இருக்கீங்களே அப்பா. எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. நான் வரேன் என்கிறார். கதிர் அவனை அடிச்சு கையை உடைக்கணும் எனக் கூற பாண்டியன் இதெல்லாம் எதுவும் வேண்டாம் என்று தானே உங்களை திட்டுனேன் என்கிறார். எல்லாரும் அமைதியா இருங்க என்கிறார்.
ரூமிற்குள் வரும் கதிரை ராஜி கன்னாபின்னாவென திட்டுகிறார். நம்ம கல்யாண விஷயத்தை சொன்னதுக்கு காரணமே இரண்டு குடும்பத்துக்கும் இருக்க பிரச்னை தீருமா என்பதற்குதான். நீ ஏன் இப்படி சொல்லிட்டு இருக்க என அவரை திட்டுகிறார்.