உச்சநீதிமன்றம் டெல்லி-என்சிஆர் தெருக்களில் இருந்து தெருநாய்களை அகற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இந்த தீர்ப்பின் மீதான சர்ச்சை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தெருநாய்களின் பிரச்சினை குறித்து கவலை தெரிவித்துள்ளார். அவற்றை காப்பகத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கலாம். இந்த ஊமை உயிரினங்கள் ஒழிக்கப்படக்கூடிய ‘பிரச்சனை’ அல்ல, அவ்வாறு செய்வது கொடுமை எனக் கூறியுள்ளார்.
டெல்லி-என்.சி.ஆரில் இருந்து அனைத்து நாய்களையும் அகற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு பல தசாப்த கால மனிதாபிமான மற்றும் அறிவியல் அடிப்படையிலான கொள்கையிலிருந்து பின்வாங்குவதாக ராகுல் காந்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், ”டெல்லியில் தெருநாய்களை அகற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவு, மனிதாபிமான, அறிவியல் சார்ந்த கொள்கைகளுக்கு பின்னடைவு. அவைகளை அகற்றும் முடிவு கொடூரமானது. காப்பகங்கள், கருத்தடை, தடுப்பூசி மற்றும் சமூக பராமரிப்பு மூலம் பொது பாதுகாப்பையும் விலங்குகள் நலனையும் ஒரு சேர உறுதி செய்ய முடியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?