தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொள்கை மாநாடு நடைபெற்றபோது, திமுக தரப்பிலிருந்து பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாக தவெக தரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இந்நிலையில், தவெகவின் இரண்டாவது மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுவரை திமுக எந்தவித பிரச்சினையும் ஏற்படுத்தவில்லை என அனைவரும் ஆச்சரியமடைந்திருந்த நிலையில், மதுரை உள்ளூர் மக்கள் திமுகவின் செயலை வேதனையுடன் விமர்சித்துள்ளனர்.
மாநாட்டு இடத்திற்கு செல்லும் முக்கிய சாலைகளில், நன்றாக இருந்த சாலைகளை பழுதுபார்க்கும் பெயரில் குழிகள் தோண்டி சேதப்படுத்தியுள்ளதாகவும், இதனால் மாநாட்டில் பங்கேற்க வருபவர்களுக்கு சிரமம் ஏற்படும் எனவும் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், உண்மையில் சாலைப்பணிகள் தேவைப்படும் இடங்களை விட்டுவிட்டு, இப்படியான தேவையற்ற வேலைகளை செய்வதன் மூலம் அரசு மாநாட்டை அசௌகரியப்படுத்த முயல்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டுகள் அடங்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மதுரை மக்கள், “நாங்கள் உள்ளூரில் இருப்பவர்கள் இந்த சாலை சேதங்களால் பெரும் சிரமத்தை சந்திக்கிறோம். மாநாட்டிற்கு வருபவர்களும் போக்குவரத்து அசௌகரியங்களால் பாதிக்கப்படுவர்” என வேதனையுடன் கூறியுள்ளனர். தவெக தரப்பும் இதை “திருட்டு திமுக அரசின் சதி” எனக் கண்டித்துள்ளது. இதுபோன்ற செயல்கள் அரசியல் போட்டியை சீர்குலைக்கும் என்பதால், அனைத்து தரப்பினரும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.