மரண படுக்கையில் தமிழ் நடிகர்... தனுஷ் உருக்கம்..!
Newstm Tamil August 12, 2025 11:48 PM

'துள்ளுவதோ இளமை'. தனுஷ் அறிமுகமான இந்த படத்தில் அவருடன் இணைந்து அறிமுகமானவர் அபிநய் கிங்கர். தனுசின் நண்பராக நடித்தார். அதன்பிறகு ஜங்ஷன், சிங்கார சென்னை, பொன் மேகலை ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தார். சக்சஸ், தாஸ், தொடக்கம், சொல்ல சொல்ல இனிக்கும், 'பாலைவனச் சோலை 2, ஆறுமுகம், கார்த்திக் அனிதா, கதை, 'ஆரோகணம்', என்றென்றும் புன்னகை, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

43 வயதான அபிநய்க்கு கல்லீரல் தொற்று பிரச்னை ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அபிநய் திருமணம் செய்து கொள்ளவில்லை. குடும்பத்தினரும் வறுமை நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அபிநய், கல்லீரல் முற்றிலும் பாதிக்கப்பட்டு சீரிஸாக இருக்கிறார். உதவிக்கு கூட ஆள் இல்லாமல், எப்போது வேண்டுமானாலும் உயிர்போகும் என்ற பரிதாப நிலையில் இருக்கும் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், அபிநய்யின் மருத்துவச் செலவுக்கு ₹5 லட்சம் கொடுத்துள்ள நடிகர் தனுஷ், 'நண்பா மீண்டும் வந்துவிடுவாய்' என ஆறுதல் கூறியிருக்கிறார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.