சரியான திட்டமிடலும் பொறுமையும் அனுபவமும் இருந்தால் அனைவராலும் வெற்றியடையலாம் என்பதற்கு உதாரணம் ஏ.டி பத்மசிங் ஐசக். இவர் தற்போது ரூ.2000 கோடி சொத்து மதிப்பு கொண்டதாக கூறப்படும் ஆச்சி மசாலா (Aachi Masala) நிறுவனத்தின் தலைவர். இன்று ஆச்சி மசாலாவின் தயாரிப்புகள் அனைவருக்கும் மிகவும் பரிச்சயம். இந்த நிறுவனத்தின் சிக்கன் (Chicken) குழம்பு மசாலா, மீன் வறுவல் மசாலா என இதன் தயாரிப்புகள் அனைத்தும் மக்களிடையே மிகவும் பிரபலம். ஆனால் அது அவ்ளவு எளிதில் நடந்து விடவில்லை. சிறுவயதிலேயே தனது தந்ததையை இழந்த பத்மசிங் ஐசக் தனது கடின உழைப்பாலும் பொறுமையாலும் இந்த உயரத்தை அடைந்திருக்கிறார். அவரது வெற்றிக்கதையை குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியை சேர்ந்த பத்மசிங் ஐசக், தனது 12 வயதில் தந்ததையை இழந்தார். பின்னர் அவரது தாயும், நான்கு சகோதரர்களும் வாழ்வாதாரத்திற்கே மிகவும் சிரமப்பட்டனர். இருப்பினும் பத்மசிங் தனது படிப்பை மட்டும் கைவிடவில்லை. கல்லூரியில் பிகாம் படித்த அவர், கோத்ரேஜ் நிறுவனத்தின் விற்பனை பிரிவில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு அந்த நிறுவனத்தின் ஹேர் டை தயாரிப்புகளை சந்தைப்படுத்துதல், பிராண்டிங், விநியோகம் போன்ற பல வேலைகளை கற்றார். தொடர்ந்து 10 ஆண்டுகள் அந்த நிறுவனத்தில் பணியாற்றிய அவர், ஒரு கட்டத்துக்கு மேல் அவரால் அந்த நிறுவனத்தில் உயர் பதவிகளை அடைய முடியவில்லை. காரணம் எம்பிஏ படித்தவர்களுக்கு தான் உயர் பதவி வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. இதனையடுத்து அந்த நிறுவனத்தில் இருந்து விலக முடிவெடுத்தார்.
இதையும் படிக்க :17 முறை தோல்வி – தற்போது ரூ.40,000 கோடி நிறுவனத்தின் தலைவர் – ஷேர்சாட் நிறுவனரின் வெற்றிக்கதை!
ஆச்சி மசாலா உருவான விதம்சிறுவயதில் இருந்தே தனது அம்மா உருவாக்கும் மசாலா பொருட்களின் சிறப்புகளை அவர் உணர்ந்திருக்கிறார். எனவே அதனை வைத்து தொழில் துவங்க முடிவெடுக்கிறார். மேலும் இந்த அவசர உலகில் பெண்களுக்கு மசாலா அரைக்க போதிய நேரம் இல்லை என்பதையும் அவர் புரிந்துகொள்கிறார். அப்படி உருவானது தான் ஆச்சி மசாலா. கடந்த 1995 ஆம் ஆண்டு உருவான இந்த ஆச்சி மசாலா மக்களிடையே பிரபலமான பிராண்டாக இருந்து வருகிறது. ஆச்சி என்ற பெயர் தாய்மையை குறிப்பதாக சொல்கிறார்.
இதையும் படிக்க : மெரினாவில் டீ , சமோசா விற்றவர்… இன்று 14 ஹோட்டல்களின் உரிமையாளர் – யார் இந்த பாட்ரிசியா நாராயண்?
பத்மசிங் ஐசக்கின் வியாபார யுக்திஆரம்பகட்டத்தில் குழம்பு மசாலா பொடியை ரூ.2க்கு விற்கிறார். இதனால் எளிய மக்களிடம் அவரது பொருள் சென்று சேருகிறது. ஆனால் வியாபாரத்தை பெருக்க வேண்டும் என முடிவெடுத்த அவர், தனது மசாலா பொருட்களுக்கு இலவசமாக ஸ்டீல் டம்ளர் வழங்குகிறார். இது வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. இதனையடுத்து அவர் தரத்தில் ஒரு சமரசமும் செய்யாமல் தொடர்ந்து விடாமுயற்சியுடன் விற்பனையில் கவனம் செலுத்தினார்.
இதனால் வெகு விரைவிலேயே அவரது ஆச்சி மசாலா கார்பரேட் நிறுவனமாக வளர்ந்தது. தனது மசாலாவுக்கு நிலவும் தேவையைக் கருத்தில் கொண்டு தனமும் 120 மெட்ரிக் டன் மசாலா பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை உருவாக்கினார். தற்போது இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.2000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. சரியான திட்டமிடலும் கடின உழைப்பும் விடா முயற்சியும் இருந்தால் அனைவராலும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக ஐசக் திகழ்கிறார்.