“தம்பி, தம்பி என்று சொல்லி என்னை ஒதுக்கி வைத்துவிட்டாய். என் சாவுக்கு காரணம் அவர்தான் என மனைவிக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவொற்றியூர் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தகட்டிடத்தொழிலாளி வெங்கடேஷ் . 28 வயதான இவர்,கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அனுசியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.சந்தோசமாக குடும்பம் நடத்திவந்தநிலையில் தம்பி என்ற ஒருவரால் குடும்பத்துக்குள் குழப்பம் வந்துள்ளது.
அவர்தான் அனுசியாவின் தம்பியின் நண்பரான முகேஷ், மனைவியை பிரிந்து கடந்த 3 மாதங்களாக அனுசியாவின் வீட்டில் தங்கி உள்ளார் முகேஷ். வீட்டுக்குள் மற்றவர்களை விட்டாலே குழப்பம்தான் .அதுதான் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.முகேஷ் என்பவரை அவரையும் தனது தம்பி என்றே அனுசியா அழைத்து வந்துள்ளதாக தெரிகிறது. இது கணவனுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது ,அதுமட்டுமல்லாமல் இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்தநிலையில் முகேஷ், அனுசியா மற்றும் அவரது 2 குழந்தைகளையும் திருவொற்றியூர் தேரடி பகுதியில் உள்ள துணிக்கடைக்கு அழைத்துச்சென்று துணி வாங்கி கொடுத்ததாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த வெங்கடேஷ், தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது தற்கொலைக்கு முன்பாக வெங்கடேஷ் தனது மனைவிக்கு எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
அந்த கடிதத்தில், “தம்பி, தம்பி என்று சொல்லி என்னை ஒதுக்கி வைத்துவிட்டாய். என் சாவுக்கு காரணம் முகேஷ்” என எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.