திருப்பதி தேவஸ்தானம் திருமலைக்குள் நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் பாஸ்டேக் கட்டாயம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு அலிபிரி சோதனைச் சாவடியில் அனுமதி இல்லை. பக்தர்களின் வசதிக்காக பாஸ்டேக் ரீசார்ஜ் மற்றும் அப்ளை செய்து புதிய ஐடி பெற கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து விடுமுறை, பண்டிகை நாட்கள் வருவதால் திருப்பதி வரும் பக்தர்கள் இதனை மறக்காமல் செய்துவிடுங்கள். அதன்படி, FASTag இல்லாத வாகனங்கள் திருமலைக்கு அனுமதிக்கப்படாது. FASTag இல்லாதவர்கள் அலிபிரி சோதனைச் சாவடியில் ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள FASTag வழங்கல் மையத்தில் உடனடியாக FASTag பெறலாம்.
இந்த விதி ஆகஸ்ட் 15 முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் இந்த புதிய விதியை பின்பற்றி தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் பயண நேரத்தை மிச்சப்படுத்தவும், வாகன நெரிசலை குறைக்கவும், பயண அனுபவத்தை மேம்படுத்தவும் உதவும் என திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?