சரக்கடித்து மட்டையான செல்வராகவன்.. சந்தானம் படம் ட்ராப் ஆனதன் பின்னணி..
CineReporters Tamil August 13, 2025 02:48 AM

இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன் செல்வராகவன். அவரின் தம்பி தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தை முதன்முதலாக இயக்கினார். ஆனால் வியாபாரத்திற்காக அந்த படத்தின் டைட்டில் கார்டில் இயக்குனர் என கஸ்தூரிராஜாவின் பெயர் போடப்பட்டது. அந்த படம் ஹிட் அடிக்கவே அடுத்து மீண்டும் தனுஷை வைத்து காதல் கொண்டேன் படத்தை எடுத்தார் செல்வராகவன். படத்தை வேற லெவலில் எடுக்கிறாரே என ரசிகர்களும் தயாரிப்பாளர்களும் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.

அடுத்து அவர் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களும் பேசப்பட்டது. இயக்குனர் மணிரத்தினமே செல்வராகவனின் ரசிகராக மாறினார். ஸ்டன்னிங் இயக்குனர் என செல்வராகவனுக்கு அவர் பட்டமே கொடுத்தார்.

ஆனால் செல்வராகவன் அதை தக்க வைத்துக் கொள்ளவில்லை. அவர் இயக்கிய மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸில் தோல்வி அடைந்தன. சூர்யாவை வைத்து இயக்கிய என்.ஜி.கே படமும் ஓடவில்லை. எனவே பெரிய நடிகர்கள் செல்வராகவன் இயக்கத்தில் நடிப்பதை விரும்பவில்லை.

#image_title

செல்வ ராகவன் படம் இயக்கினால் ஒன்று டிராப் ஆகும் இல்லையென்றால் பிளாப் ஆகும் என பேச துவங்கினார்கள். சிம்புவை வைத்து கான் என்கிற படத்தை இயக்கினார். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் படம் ட்ராப் ஆனது. சந்தானத்தை வைத்து மன்னவன் வந்தானடி என்கிற படத்தை இயக்கினார். இப்படத்தில் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் படம் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் மன்னவன் வந்தானடி படம் என்ன பிரச்சனையை சந்தித்தது என்பது இப்போது வெளியே கசிந்திருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர் பைசான் நாட்டில் சில நாட்கள் நடந்திருக்கிறது. எல்லோரும் தயாராகி சூட்டிங் நடக்கும் இடத்தில் காத்திருந்தால் செல்வராகவன் ஹோட்டல் ரூமில் சரக்கு அடித்து விட்டு மட்டையாகி கிடப்பாராம். இப்படி 3 நாட்கள் அவர் வெளியே வரவில்லை. அவரை எழுப்ப முயற்சித்தும் பலன் அளிக்கவில்லை.

எனவே அவரின் மனைவியை சென்னையிலிருந்து அஜர்பைசான் நாட்டுக்கு வரவழைத்து அதன்பின் அவரை எழுப்பி ஷூட்டிங் நடத்தி இருக்கிறார்கள். இது போன்ற காரணங்களால்தான் அந்த படம் டிராப்பானதாக சொல்லப்படுகிறது. ஆனால் செல்வராகவன் கடந்த சில வருடங்களாகவே குடிப்பழக்கத்தை விட்டு விட்டார் என்கிறார்கள். இதை அப்போதே செல்வராகவன் செய்திருந்தால் மன்னவன் வந்தானடி படம் வெளியாகியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.