திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கணக்கம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் பழனிச்சாமி. இவர் கட்டிடத் தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர். பழனிச்சாமியின் மனைவி விஜயா மற்றும் மகன் நல்லசாமி ஆகியோர் குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றிருந்தனர். வீட்டில் மகள் தனலட்சுமி மற்றும் தந்தை பழனிச்சாமி இருவரும் மட்டும் இருந்தனர்.மகள் தனலட்சுமிக்கு உடல்நிலை சரியில்லாததால் தந்தை பழனிச்சாமி மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் வீட்டில் இருந்த மகளை கழுத்தை நெரித்து கொலை செய்த பழனிச்சாமி, தனலட்சுமி உடலுக்கு இறுதி சடங்குகளை செய்துவிட்டு பழனிச்சாமியும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பழனிச்சாமியின் மனைவி விஜயா திருச்சந்தூரில் இருந்து மகள் மற்றும் கணவனை செல்போனின் தொடர்பு கொண்ட போது இருவரும் செல்போனை எடுத்து பேசவில்லை. இதனால் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களை வீட்டில் சென்று பார்க்கக் கூறியுள்ளார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டிக்கொண்டு திறக்க முடியாதபடி இருந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
போலீசார் வந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது தனலட்சுமி மற்றும் பழனிச்சாமி இருவரும் சடலமாக கிடந்தனர். போலீசார் 2 உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் மகளின் உடல்நிலை சரியில்லாததால் மன உளைச்சலில் இருந்த பழனிச்சாமி மகளைக் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதன்பிறகு மகளின் உடலுக்கு இறுதி சடங்குகளை செய்து விட்டு பழனிச்சாமியும் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?