ஆந்திரப் பிரதேசம், கர்னூல் மாவட்டம், ஆள்ளகட்டா சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் அகிலபிரியா, முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இளம் வயதிலேயே மாநில அமைச்சராகப் பதவி வகித்தவர்.
நடிகை ரோஜா பதவி வகித்த சுற்றுலா மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறையில், அகிலபிரியாவும் அமைச்சராக இருந்த அனுபவம் கொண்டவர்.
இந்த நிலையில், நேற்று கர்னூலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடிகை ரோஜா அமைச்சராக இருந்தபோது, ‘ஆடுதாம் ஆந்திரா’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் விளையாட்டு நிகழ்ச்சிகளை ஊக்குவிக்கும் பெயரில் சுமார் ரூ.100 கோடி ஊழல் செய்ததாக குற்றம்சாட்டினார்.
அகிலபிரியா, இந்த குற்றச்சாட்டை விசாரித்து, அரசுப் பணத்தை தவறாக பயன்படுத்தியவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.