அரைக்கீரை கட்லெட்
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
அரைக்கீரை - ஒரு கட்டு
உருளைக்கிழங்கு - 1
பெரிய வெங்காயம் - 1
ரஸ்க்தூள் - அரை கப்
கேரட் துருவல் - அரை கப்
இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
முதலில்,உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரிக்கவும். அரைக்கீரை மற்றும் பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அரைக்கீரை மற்றும் வெங்காயத்தை சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கவும்.
கொஞ்சம் வதங்கியதும் உப்பு, கேரட் துருவல், கொத்தமல்லி, இஞ்சி விழுது சேர்த்து மேலும் வதக்கவும். வதக்கிய கீரை கலவையுடன் வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்துப் பிசைந்து, கட்லெட் வடிவத்தில் தட்டி, ரஸ்க் தூளில் புரட்டவும். தவாவில் பரவலாக கட்லெட்களை வைத்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு பொன்னிறமானதும் எடுக்கவும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி, சாஸ் தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.