கை குடைச்சல்
ஒரே இடத்தில் அமர்ந்தவாறு பல மணிநேரம் வேலை செய்பவர்களுக்கும் இப்பிரச்சினை வரும்.
காரணங்கள் :
முதுகுத்தண்டுவடத்தில் உள்ள டிஸ்க் நழுவி நரம்பு மீது அழுத்துவதால், கை குடைச்சல் வரும்.
இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடு இல்லாமல் இருப்பது, கை நரம்புகள் பாதிப்புக்கு உள்ளதால், வைட்டமின் B12, கால்சியம் சத்து குறைவதால், தைராய்டு ஹார்மோன் குறைவாக இருப்பதால்.
எப்போது எல்லாம் கை குடைச்சல் வரும் :
தொடர்ச்சியாக நீண்ட நேரம் வாகனம் ஓட்டும்போது, ஒரே இடத்தில் அமர்ந்தவாறு தொடர்ந்து 10 மணிநேரம் அல்லது அதற்குமேல் வேலை செய்பவர்கள் கை குடைச்சல் உண்டாகும்.
பெண்களில் 30 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவருக்கு கை, குடைச்சல் அதிகமாக வரும்.
மாதவிலக்கு, தாய்மை அடைதல், அதிக வேலைச்சுமை, இரத்தச்சோகம், தைராய்டு ஹார்மோன் குறைபாடு போன்றவை காரணங்கள் ஆகும்.
உணவு முறைகள் :
உண்ணவேண்டிய உணவு முறைகள் :
புழுங்கலரிசி உணவு
கஞ்சி
எண்ணெய் இல்லாத கோதுமை ரொட்டி
உளுந்து
ரசம்
தவிர்க்க வேண்டிய உணவு முறைகள் :
கிழங்கு வகைகள்
காரம் அதிகமுள்ள உணவுகள்
கொழுப்பு நிறைந்த உணவுகள்
உடற்பயிற்சிகள் :
கை பயிற்சி
மண்டுகாசனம்
நடைபயிற்சி