தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இது குறித்து தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகஸ்ட் 12, 2025ம் தேதி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். “ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் 50 ஆண்டுகள் என்பது மாபெரும் சாதனை. திரையுலகில் உள்ள அனைவரும் இணைந்து அவருக்கு ஒரு பாராட்டு விழா எடுக்க வேண்டும்,” எனக் கூறியுள்ளார். இது குறித்து மேலும் “எனது கணவர் கேப்டன் விஜயகாந்த் இருந்திருந்தால், ரஜினிகாந்தின் 50-வது திரைப்பயண ஆண்டு விழாவை மிகவும் விமரிசையாக கொண்டாடியிருப்பார்,” எனக் குறிப்பிட்டார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரேமலதா “திரைத்துறையில் 50 ஆண்டுகாலம் நிறைவு செய்திருக்கிறார் ரஜினிகாந்த் அவர்கள்… அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை கேப்டன் சார்பாகவும் என் சார்பாகவும் மற்றும் தேமுதிக தொண்டர்கள் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறேன். கேப்டன் மீது பேரன்பு கொண்டவர் ரஜினிகாந்த் என்பது நாடறியும். கேப்டன் இருந்திருந்தால் நிச்சயமாக ரஜினிகாந்த்திற்கு ஐம்பதாவது ஆண்டு விழா விமரிசையாக கொண்டாடி இருப்பார்.
கேப்டன் மீதும் எங்கள் குடும்பத்தினர் மீதும் பேரன்பு கொண்டவர்கள் ரஜினிகாந்த் அவர்களும் அவரது குடும்பத்தினரும். திரை உலகில் உள்ள சங்கங்கள் எல்லாம் இணைந்து,சூப்பர் ஸ்டாராக ஐம்பது ஆண்டு காலம், தமிழ் திரையுலகில் வலம் வந்த ரஜினிகாந்த் அவர்களுக்கு மிகப்பெரிய பாராட்டு விழா எடுக்க வேண்டும். திரை உலகத்தில் உள்ள அனைவரும் இணைந்து இந்தப் பாராட்டு விழாவை நடத்தினால் சிறப்பாக இருக்கும் என கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?