அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 3ஆம் கட்ட சுற்றுப்பயணம் ஆகஸ்ட் 23ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த அந்த அறிவிப்பில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான ‘புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K.பழனிசாமி அவர்கள், ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு, 23.8.2025 முதல் 25.8.2025 வரை, கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, சட்டமன்றத் தொகுதி வாரியாக, 'புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணம்' - தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்கள்.
23.8.2025 - சனி - திருவெறும்பூர், திருச்சி கிழக்கு, லால்குடி
24.8.2025 - ஞாயிறு -மணச்சநல்லூர், துறையூர், முசிறி
25.8.2025 - திங்கள் - மணப்பாறை, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம்
புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணத்திற்கான ஏற்பாடுகளை, சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
‘புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணத்தின்' போது சம்பந்தப்பட்ட கழக மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டப் பொறுப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.