Coolie: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் கூலி படம் வருகிற 14-ஆம் தேதி வெளியாக உள்ளதால் உலகம் முழுவதும் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களில் முன்பதிவிலேயே கிட்டத்தட்ட 100 கோடி வரை வசூலாகியிருக்கிறது.
ரஜினிகாந்த் படம் என்றாலே அவரின் படம் வெளியாகும் போது தியேட்டர்கள் திருவிழா போல மாறும். ரஜினி ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடுவார்கள். கபாலி படத்திற்கு பின் கூலி திரைப்படமும் ரஜினி ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக மாறி இருக்கிறது. சில தனியார் நிறுவனங்கள் 14 தேதி விடுமுறையே அறிவித்துவிட்டனர். அதற்கு காரணம் லோகேஷ் கனகராஜ் மற்றும் கூலி படத்தின் டிரைலர் ஏற்படுத்திய பாதிப்பு என்று சொல்லலாம்.
கூலி படம் தமிழ்நாடு கேரளா ஆந்திரா கர்நாடகா வட மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகள் என உலகம் முழுவதிலும் சுமார் ஏழாயிரம் தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. எனவே எல்லா இடங்களிலும் ரசிகர்கள் போட்டி போட்டு டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து வருகிறார்கள். தொடர்ந்து ஒரு வாரங்கள், பத்து நாட்கள் எல்லாம் தியேட்டர்களில் எல்லா காட்சிகளுக்கும் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது.
இந்நிலையில் கூலி படத்திற்கு ஸ்பெஷல் ஷோ என சொல்லப்படும் சிறப்பு காட்சி இருக்கிறதா?.. எந்தெந்த மாநிலங்களில் என்னென்ன நேரத்திற்கு கூலி படம் வெளியாகிறது? என தெரிந்து கொள்ளும் ஆர்வம் ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை கூலி படத்திற்கு சிறப்பு காட்சி ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணிக்கு திரையிடப்படுகிறது. 9 மணி முதல் இரவு 2 ,மணி வரை 5 சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது. ஆனால் கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் சிறப்பு காட்சி காலை 6 மணிக்கு திரையிடப்படுகிறது. மேலும் வெளிநாடுகளில் இந்திய நேரப்படி 14 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படவிருக்கிறது.