கவின் கொலை வழக்கு... சுர்ஜித்தை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று சிபிசிஐடி விசாரணை!
Dinamaalai August 13, 2025 07:48 AM

 

நெல்லையில் கவின் எனும் இளைஞர் கொலைச் செய்யப்பட்ட நிலையில், சுர்ஜித்தை சம்பவ இடத்திற்கு நேரில் அழைத்து சென்று சிபிசிஐடி விசாரணை நடத்தினர். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த இளைஞர் கவின்குமாரை காதலியின் சகோதரன் சுர்ஜித், கடந்த மாதம் 27ம் தேதி நெல்லை பாளையங்கோட்டையில்  வெட்டிக் கொலைச் செய்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சுர்ஜித் போலீசில் சரணடைந்தார். 

கவின்குமார் காதலித்த இளம்பெண்ணின் பெற்றோரான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தம்பதி சரவணன், கிருஷ்ணகுமாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதில், இளம்பெண்ணின் தந்தை சரவணனையும் போலீசார் கைது செய்தனர்.இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணனை சிபிசிஐடி போலீசார் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் கவின் குமாரை கொலை செய்த சுர்ஜித்தை சிபிசிஐடி போலீசார் இன்று கொலை நடந்த இடத்திற்கு நேரில் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். கொலை நடந்த இடத்தில் வைத்து, கொலை நடந்தது எப்படி என்பது குறித்து சிபிசிஐடி போலீசாரிடம் சுர்ஜித் நடித்து காட்டினார். அதன் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.