சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ மக்களிடையே பெரும் பேசுபொருளாகியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு சிறுவன் தனது சைக்கிளை மழையில் கூட எளிதாக ஓட்டிக்கொள்வதற்காக ஒரு யோசனையை பயன்படுத்தியிருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. பொதுவாக மழையில் சைக்கிளோ, இருசக்கர வாகனமோ ஓட்டுவது மிகவும் சிரமமான காரியம் தான்.
View this post on InstagramA post shared by Flirtculture (@flirtculture)
இந்த சிறுவன் தனது சிந்தனையை பயன்படுத்தி, மழையிலும் சைக்கிளை சிரமமின்றி ஓட்டும் வழியை கண்டுபிடித்துள்ளார். அந்த வீடியோவில், சிறுவன் தனது சைக்கிளின் மீது ஒரு மூங்கில் குச்சியை பொருத்தி அதில் ஒரு தார்பாயை போர்த்தியுள்ளார். இதனால் சைக்கிளை மழை நேரத்திலும் கூட நனையாமல் ஓட்டமுடிகிறது. அவர் சைக்களுடன் தன்னையும் தனது சைக்கிளையும் முழுமையாக பாதுகாத்துக் கொண்டிருக்கிறார். இந்த யோசனை மிகவும் எளிமையானதாக இருந்தாலும், அதே சமயம் பயனுள்ள ஒன்றாக இருப்பதால், அந்த வீடியோ மக்கள் முன் வெளியானதும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சிறுவனின் இந்த திறமை காரணமாக, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ flirtculture என்ற இன்ஸ்டா பக்கத்தில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர். பல்வேறு விதமான கருத்துக்களையும் பாராட்டுக்களையும் பதிவிட்டுள்ளனர். அதில் ஒருவரோ, “என்ன சொன்னாலும், இந்த சிறுவனின் யோசனை அற்புதம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?