அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் ED ரெய்டு.. சென்னை, மதுரையில் குவிந்த அதிகாரிகள்.. பரபரப்பு!
TV9 Tamil News August 17, 2025 12:48 AM

சென்னை, ஆகஸ்ட் 16 : தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் 2025 ஆகஸ்ட் 16ஆம் தேதியான இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் ஐ. பெரிசாமிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.  தமிழ ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருப்பவர் ஐ.பெரியசாமி. மேலும், திமுகவின் துணை பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார். இவர் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார்.

அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

இந்த நிலையில், 2025 ஆகஸ்ட் 16ஆம் தேதியான இன்று காலையிலேயே பசுமை வழிச்சாலையில் உள்ள இவரது இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறார்கள். அதாவது, சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், திருவல்லிக்கேணியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் இருக்கும் ஐ.பெரியசாமி அறையிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அதோடு, பழனி சட்டமன்ற உறுப்பினரும், பெரியசாமி மகனுமான ஐ.பி. செந்தில்குமார் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.  சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், இந்த ரெய்டு எதற்காக நடைபெறுகிறது என்ற முழு விவரம் வெளிவரவில்லை. அமலாக்கத்துறையின் முழு சோதனைக்கு பிறகே, இது வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : நாகாலாந்து மாநில ஆளுநர் இல. கணேசன் காலமானார்..

யார் இந்த ஐ.பெரியசாமி?

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகவும், திமுகவின் துணை பொதுச் செயலாளராகவும் இருப்பவர் ஐ.பெரியசாமி. இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் திமுகவின் முகமாக இருந்து வருகிறார். இவர் திமுக தலைமைக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறார். அதோடு, தொடர்ந்து கட்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவர் 1986ஆம் ஆண்டு தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 1989ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் முதல்முறையாக போட்டி வெற்றி பெற்றார்.

அதைத் தொடர்ந்து, 1996ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக அமைச்சரானார். பின்னர், தமிழக அமைச்சரவையில் பல்வேறு துறைகளை இவர் கவனித்து வந்தார். தொடர்ந்து, 2016, 2021ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றார்.

Also Read : த.வெ.க வின் இரண்டாவது மாநில மாநாடு.. 5 குழுக்கள் அறிவித்த தலைமை..

சுமார் ஆறு முறை ஆத்தூர் தொகுதியில் ஐ.பெரியசாமி வெற்றி பெற்றார். குறிப்பாக, தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில், முதல்முறையாக 1.34 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஐ.பெரியசாமி வெற்றி பெற்றார். இப்போது, தமிழக ஊரக வளர்ச்சித்துறையை கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.