திமுகவை பழிவாங்கும் நடவடிக்கை! அரசியல் உள்நோக்கத்துடன் அமலாக்கத்துறையினர் சோதனை - கொந்தளிக்கும் காங்கிரஸ்!
Seithipunal Tamil August 17, 2025 02:48 AM

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விடுத்துள்ள கண்டன செய்தியில், "தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும், தி.மு.கட்சியின் மூத்தத்தலைவருமான ஐ.பெரியசாமி சம்பந்தப்பட்ட இடங்களில் பழிவாங்கும் நடவடிக்கையாக அரசியல் உள்நோக்கத்துடன் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறது.

எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தவும் பிளவுபடுத்தவும் பா.ஜ.க. அரசு செய்யும் சூழ்ச்சிதான் அமலாக்கத்துறை சோதனை. இத்தகைய நடவடிக்கைகள் ஜனநாயகத்தையும் அரசியல் அமைப்பையும் சிதைக்கக் கூடியவை. அமலாக்கத்துறையினரின் இத்தகைய நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.