தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறாரா? உண்மை என்ன? வெளியான அதிகாரபூர்வ செய்தி!
Seithipunal Tamil August 17, 2025 11:48 AM

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இரு நாள் பயணமாக இன்று டெல்லி செல்ல உள்ளதாக, அதிமுக ஆதரவாளர் ஒருவர் பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளதை, தமிழக அரசி தகவல் சரிபார்ப்பக்கம் உறுதிசெய்துள்ளது.

இதுகுறித்த அதன் செய்திக்குறிப்பில், "'2 நாள் பயணமாக இன்று மாலை டெல்லி புறப்படுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நாளை பிரதமர் மோடியை சந்தித்து தமிழ்நாட்டின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்கிறார்' என்று செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.

உண்மை என்ன?

இது போலியாக உருவாக்கப்பட்ட செய்தி.

இன்று சேலம் செல்லும் முதல்வர் அவர்கள் நாளை தர்மபுரியில் நடக்கும் அரசு விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். முதல்வர் அவர்கள் டெல்லி செல்வதாகப் பரப்பப்படும் தகவல் முற்றிலும் போலியான செய்தி. வதந்தியைப் பரப்பாதீர்!


© Copyright @2025 LIDEA. All Rights Reserved.