இன்று ஆகஸ்ட் 17 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விசிக தலைவர் திருமாவளவன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் திருமாவளவனின் 63-வது பிறந்த நாள் விழா சென்னை காமராஜர் அரங்கில் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் நடனம், பாடல், கவியரங்கம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இவ்விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் கலந்து கொண்டார். விழா மேடையில் பேசிய கமல்ஹாசன், "நான் கலைஞன் எனக்கு சாதி இல்லை. நான் யார் என்ன வண்ணம் என்பதெல்லாம் முக்கியம் இல்லை, மதிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்களை நாம் சாட வேண்டியது கடமை.
மயில் தேசிய பறவை ஆகிவிட்டது, ஆனால் கணக்கு எடுத்தால் காக்கை தான் அதிகம் என அண்ணா கூறினார். இந்தியாவின் பலவீனமே சாதிகள் தான். சாதிய தடைகள் நீக்கப்பட்ட பின்தான் நாம் ஒரு தேசமாக, ஒரே மக்களாக இணைய முடியும். ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல் மையப்படுத்துவது சாதாரணமான விஷயம் இல்லை. அப்படி செய்பவர்கள் ஆச்சரியமானவர்கள். திருமா போன்ற தலைவர்கள் எப்போதும் வர மாட்டார்கள், அவர்களை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அரசியல் அல்லது ஆதாயம் இதில் எது வேண்டும் என கேட்டால் திருமா அரசியலை மட்டும் தான் தேர்வு செய்வார். ஒன்றில் அதிக அடி விழும், மற்றொன்றில் பணம் கிடைக்கும் என்றாலும் அரசியலையே அவர் அதிகம் விரும்புவார்" என்றார்.
சாதி முதல் எதிரி கட்சி ஆரம்பித்த போது முதல் எதிரியை தேர்ந்து எடுத்து விட்டீர்களா? என என்னிடம் கேட்டனர். தேர்வு செய்து விட்டேன், சாதிதான் என்னுடைய முதல் எதிரி. இனி உட்கார வேண்டும், இல்லை நடக்க வேண்டும். முட்டிக்கு வேறு வேலை கொடுக்க கூடாது. பிறப்பினால் நான் யாருக்கும் தாழ்ந்தவன் இல்லை , என்னைவிட உயர்ந்தவர் யாரும் இல்லை. அதனை உங்கள் மனதில் பதிய வைப்பது தான் இமாலய சாதனை. பெண்களுக்கு உரிமை தொகை வழங்க வேண்டும் என நாங்கள் சொன்னோம், அதை செயல்படுத்தியவர் சகோதரன் ஸ்டாலின். இன்றைக்கு தமிழகம் அடைந்துள்ள வளர்ச்சி சிலருக்கு அதிச்சியாகவும், நமக்கு பெருமையாகவும் இருக்கிறது" என பேசியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?