Jana Nayagan : தளபதி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. 'ஜன நாயகன்' படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு!
TV9 Tamil News August 18, 2025 02:48 AM

தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) இறுதி திரைப்படமாக உருவாகிவரும் படம் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படமானது கடந்த 2024 ஆம் ஆண்டு இறுதியில் தளபதி 69 என தற்காலிக டைட்டிலுடன் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படமானது தளபதி விஜய்யின் இறுதி படமாக உள்ளது எனக் கூறப்படும் நிலையில், ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த படத்தை இயக்குநர் ஹெச். வினோத் (H. Vinoth) இயக்கியிருக்கிறார். இவர் ஏற்கனவே தமிழில் துணிவு மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களை இயக்கி வெற்றி கொடுத்திருக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் மே மாதத்தின் இறுதியில் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து படத்தின் இறுதிக்கட்ட வேலைகளும் மிகவும் சிறப்பாகவே நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகளும் முழுமையாக நிறைவடைந்துள்ளதாம். இது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜன நாயகன் படமானது வரும் 2026 ஜனவரி 09 ஆம் தேதியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகக் காத்திருக்கிறது. இந்நிலையில், படத்தின் வெளியீட்டிற்கு 4 மாதங்களுக்கு முன்னே, படத்தின் டப்பிங் பணிகளும் முழுமையாக நிறைவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ‘இட்லி கடை’ படத்தில் தனுஷின் தங்கையாக நடிக்கும் அர்ஜுன் ரெட்டி பட நடிகை?

தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்தின் டீசர் வீடியோ பதிவு :

#HBDThalapathyVijay ❤️
Let the celebration continue 🔥#JanaNayaganTheFirstRoar ▶️ https://t.co/Q981uzk8jA#JanaNayagan#Thalapathy @actorvijay sir #HVinoth @KvnProductions @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju @prakashraaj @menongautham #Priyamani @itsNarain… pic.twitter.com/w3pLjT1ALL

— KVN Productions (@KvnProductions)

இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். இவர் ஏற்கனவே தளபதியுடன் பீஸ்ட் படத்தில் நடித்திருக்கிறார். இதை அடுத்ததாக, மீண்டும் ஜன நாயகன் படத்திலும் தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார் . மேலும் இப்படத்தில் நடிகர்கள் வரலட்சுமி சரத்குமார், பிரியாமணி, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், நரேன், டீஜே அருணாச்சலம் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இதையும் படிங்க : துப்பாக்கி தான் இரண்டாம் பாகம் எடுக்க சரியா இருக்கும் – ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன விசயம்

இப்படமானது சுமார் ரூ 400 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருக்கிறதாம். இப்படத்தைக் கன்னட தயாரிப்பு நிறுவனமான கே.வி. என். ப்ரொடக்ஷன் நிறுவனமானது தயாரித்துள்ளது. மேலும் தமிழ் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

ஜன நாயகன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ;

இந்த ஜன நாயகன் படமானது பொங்கலை முன்னிட்டு வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 9 அன்று வெளியாகிறது. மேலும் இது விஜய்யின் கடைசி திரைப்படம் என கூறப்படும் நிலையில், ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.