பிரபல சினிமா விமர்சகர் புளூசட்டை மாறன் கூலி படத்தை விமர்சனம் செய்து இருந்தார். அதுல பல ஓட்டைகள் இருக்கு என்றும் என்னைப் பற்றி தவறாகப் புரிந்துள்ளார் என்றும் பிரபல சினிமா விமர்சகரும், யூடியூபருமான ஆதவன் அதைக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். அதுல ரஜினியை தலீவருன்னு தான் சொன்னார்.
அதே போல ஒரு இடத்தில் ரஜினியைப் பற்றி குறிப்பிடும்போது இந்தப் படத்தில நான் யாரு தெரியுமான்னு கேட்குறாரு. ஆமா தெரியாம தான் கேட்குறேன். நீ யாருன்னு ஒருமையில் சொன்னார். பெரிய சூப்பர்ஸ்டாரை இப்படி ஒருமையில் சொல்லலாமா? அடுத்து இந்தப் படம் பேன் இண்டியா மூவியா வரணும்கறதுக்காக எல்லா முன்னணி ஸ்டார்களையும் ரஜினி நடிக்க வச்சிருக்காருன்னு ஆனா அவரு நடிக்க வைக்கல.
அவங்களை கொண்டு வந்து நடிக்க வைங்கன்னு சொன்னது கலாநிதி மாறன் அவர்கள். புரிஞ்சுதா. இப்பவும் பொறுப்பு இல்லாம நிறைய பேசிக்கிட்டு இருக்கீங்க. நான் லியோ படத்தைப் பார்க்கறதுக்கு முன்னாடி சிகாகோவுல தியேட்டருக்கு வெளியே பயர் சர்வீஸ் வண்டி நிக்குது. எல்லாரும் உஷாரா இருங்கன்னு சொல்லிப் போட்டேன். அப்புறம் தியேட்டர்லயும் போய் வீடியோ போட்டேன்.
ஆனா படத்தைப் பார்க்கறதுக்கு முன்னாடி போட்ட வீடியோ அது. ஆனா அதைத் தவறா புரிஞ்சிக்கிட்டு நீங்க மட்டும் இப்படி பேசலாமான்னு புளூசட்டை மாறன் கேட்கிறார். அவரு அதை சரியா புரிஞ்சிக்கல. அதே மாதிரி ஒரு படத்தை ரிவியு பண்ணினா தியேட்டருக்கே வராத மாதிரி பண்ணிடுறாரு. படம் பார்க்க வர்றவங்க இவரு சொல்ற ரிவியூவ பார்த்துட்டுத் தான் வரணுமா, வேணாமான்னு முடிவு பண்றாங்க. ஓஹோ எந்தன் பேபி, டிரெண்டிங், பன் பட்டர் ஜாம் படம் எல்லாம் நல்லா தானே இருந்துச்சு.
அதை நல்லா மாதிரி சொல்லி கூட ஒரு வாரம் ஓட வைக்கலாமே. புலி வந்து அடிச்சிடும்னு பயப்படாதீங்க. வந்து எல்லாரும் என் மேல படுத்துக்கோங்க. அப்படின்னா எல்லா விஜய் ரசிகர்களும் வந்து என் மேல படுத்துக்கோங்கன்னு சொல்லிருக்கீங்க. அப்போ புலி யாரு? சூப்பர் அண்ணேன் என கலாய்த்துள்ளார் பிரபல விமர்சகர் ஆதவன்.