நீ திருப்பி ஓடினாலும் உன்னை விடமாட்டேன்..! ஜீப்பில் சவாரி சென்றவரை குலை நடுங்க ஓட ஓட விரட்டிய காண்டாமிருகம்… எம்புட்டு ஆவேசம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
SeithiSolai Tamil August 18, 2025 11:48 AM

காட்டு சஃபாரியின் போது எச்சரிக்கை இன்றி எந்த விலங்கும் தாக்கிவிடும் அபாயம் உள்ளது. இதனை நிரூபிக்கும் வகையில், சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அந்த காட்சியில், கோபமாக ஓடிய ஒரு காண்டாமிருகம் நேரடியாக சஃபாரி வாகனத்தைத் துரத்தத் தொடங்கியது. உடனே புத்திசாலித்தனமாக செயல்பட்ட ஓட்டுநர், வாகனத்தை முழு வேகத்தில் பின்புறமாக ஓட்டி விலங்கின் தாக்குதலிலிருந்து தப்பித்தார்.

வீடியோவில், காண்டாமிருகம் மிகுந்த வேகத்தில் வாகனத்தை நோக்கி பாயும் காட்சி தெளிவாக தெரிகிறது. பொதுவாக பின்புறமாக ஓட்டுவது கூட சிரமமாக இருக்கும் நிலையில், சஃபாரி ஓட்டுநர் அதிசயிக்கத்தக்க திறமையுடன், திரும்பிப் பார்க்காமல் சரியான பாதையில் வாகனத்தை பின்புறமாக ஓட்டி கொண்டிருந்தார். 32 விநாடிகள் கொண்ட இந்த வீடியோவை ட்விட்டரில் @Am_Blujay என்ற பயனர் பகிர்ந்துள்ளார். இதுவரை 4 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளதுடன், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

“>

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு விதமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர். ஒருவர், “இதுபோன்ற ரிவர்ஸ் ஓட்டத்திற்குப் பல மாதங்கள் பயிற்சி தேவைப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், “இது ஒரு ஜுராசிக் பார்க் காட்சியை நினைவூட்டுகிறது” என பதிவிட்டுள்ளார்.

மேலும், “நான் இருந்திருந்தால் பயத்தில் ஓட்ட முடியாது” என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். வேகமும், வலிமையும் கொண்ட காண்டாமிருகத்தின் தாக்குதல் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.