அதிர்ச்சி தரும் காட்சி அம்பத்தூர் கருக்கு சாலையில் திடீரென உருவான ராட்சத பள்ளம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பள்ளத்தில் ஒரு பைக் முழுவதுமாக விழுந்தது. அதேசமயம், ஒரு லாரியின் டயர் பள்ளத்தில் சிக்கியதால் வாகனம் அந்தரத்தில் தொங்கியபடி நிலைகொண்டது. சம்பவ இடத்தில் மக்கள் பதற்றம் அடைந்த நிலையில், இந்த காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. நகராட்சி அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலையை சீரமைக்கும் பணிகளை தொடங்கினர்.
“>