ஒரு பாட்டு பாடுனது குத்தமா..! தாசில்தாரை சஸ்பெண்ட் செய்த வருவாய் கோட்ட ஆணையர்!
Seithipunal Tamil August 18, 2025 09:48 AM

மராட்டிய நந்தேட் மாவட்டம் உமிர் தாலுகாவில் 'பிரசாந்த் தோரட்' தாசில்தாராக பணியாற்றி வந்தவர். இவர் கடந்த 30ம் தேதி உமிர் தாலுகாவிலிருந்து லதூர் மாவட்டம் ரினாபூர் தாலுகாவிற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து கடந்த 8ம் தேதி, உமிர் தாலுகா அலுவலகத்தில் பிரசாந்த் தோரட்டிற்கு பிரிவு உபராச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஊழியர்களாக அந்த தாலுகாவில் பணியாற்றுபவர்கள் பங்கேற்றனர்.

அந்த நிகழ்ச்சியில் பிரசாந்த் தோரட், தாசில்தார் இருக்கையில் அமர்ந்திருந்தவாறு சினிமா பாடலை பாடினார்.கடந்த 1981ம் ஆண்டு 'அமிதாப் பட்சன்' நடிப்பில் வெளியான இந்தி திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடலை பாடினார்.

இதுகுறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.இந்த சூழ்நிலையில், பிரிவு உபசார நிகழ்ச்சியில் சினிமா பாடல் பாடிய தாசில்தார் பிரசாந்த் தோரட் பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யபட்டுள்ளார்.

வருவாய் கோட்ட ஆணையர், இந்த நிகழ்வில் நடத்தை விதிகளை மீறியதால் பிரசாந்த் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.