திருவெற்றியூர் மாநகரப் பேருந்து நடத்துநர் ரமேஷ். 54 வயதாகும் இவர் பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜா கடையில் வசித்து வருபவர் ரமேஷ் .இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து திருவொற்றியூர் வரை தடம் எண் 56சி பேருந்தில் பணி புரிந்து வந்தார்.
ஓட்டுநர் பாண்டியனும் ரமேஷும் காலை 6 மணிக்கு பயணிகளை ஏற்றுக் கொண்டு வந்த நிலையில், திடீரென ரமேஷுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.இதனையடுத்து, அவரை உடனடியாக திருவொற்றியூர் ஆகாஷ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் மருத்துவர்கள் அவரை பரிசோதித்து விட்டு ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக கூறினர். இதன் பிறகு அவரது உடல் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. நடத்துநர் ரமேஷ் உயிரிழப்பு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?