ஒடிசா முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக் உடல்நலக்குறைவு காரணமாக புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சற்றுமுன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். என்ன பிரச்சனை என்ற விவரம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளிவராத நிலையில், இது குறித்து மாநிலம் முழுவதும் கவலை நிலவுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், கடந்த ஜூலை 20ஆம் தேதி நவீன் பட்நாயக் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூட்டுவலி காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தார்.
அந்த சிகிச்சைக்குப் பின் அவர் சீராக இருந்தாலும், தற்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அவரது ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.