தமிழ் சினிமாவின் உச்ச பட்ச நடிகர்கள் ரஜினி மற்றும் விஜய். தமிழ் சினிமாவின் போட்டியே இவர்களுக்கு இடையில் என்று தான் சொல்ல வேண்டும். அப்படித்தான் அடுத்தடுத்த தங்களுடைய படங்களின் வசூலால் ஒருவர் ரெக்கார்ட் செய்வதும் அதனை மற்றவர் முறியடிப்பதுமாக தொடர்ந்து மாறி மாறி நடந்து வருகிறது. 75 வயதிலும் ரஜினி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோவாக தொடர்ந்து பயணித்து வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுத்து வருகிறார்.
சமீபத்தில் வெளியான கூலி திரைப்படம் தற்போது வரை கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் முதல் நாளிலே 151 கோடி வசூலித்து இதற்கு முன் ஹையஸ்ட் ரெக்கார்ட் ஆக இருந்த லியோவை முறியடித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் விஜய் நடித்திருந்த லியோ படம் முதல் நாள் உலகம் முழுவதும் சுமார் 148 கோடி வசூலித்து தமிழ் சினிமாவில் புதிய ரெக்கார்டை உருவாக்கி இருந்தது. தற்போது அந்த ரெக்கார்டை முறியடித்துள்ளார் ரஜினி.
தங்களுக்குள்ளே தொழில் ரீதியாக பல போட்டிகள் இருந்தாலும் நான் ரஜினி ரசிகன் என்று விஜய் பலமுறை கூறியிருக்கிறார். அதை அவரின் படங்களிலும் அங்கங்கே சுட்டிக்காட்டி உள்ளார். இருப்பினும் ரசிகருக்கிடையே தேவையில்லாத போட்டிகள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த ரெக்கார்டை எங்கள் தளபதியின் ”ஜனநாயகன்” திரைப்படம் முறியடிக்கும் என்று இப்போதே விஜய் ரசிகர்கள் கூவ தொடங்கி விட்டனர். விஜய் அடுத்த கட்ட நகர்வாக அரசியலில் பயணிக்க இருக்கிறார்.
அதனால் ஜனநாயகன் படம் தான் என்னுடைய கடைசி படம் என்று அவரே அறிவித்துவிட்டார். விஜயின் அரசியல் வருகைக்கு ரஜினிகாந்த் வாழ்த்து சொன்னார். ஆனால் தற்போது ரஜினி திரை உலகிற்கு வந்து 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். இதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் ஒரு வாழ்த்து கூட சொல்லவில்லை. இதற்கு முன்பாக பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் என பல நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்தார்கள்.
ஆனால் விஜய் மட்டும் இன்றுவரை ரஜினிக்கு வாழ்த்து சொல்லாதது விஜய்க்கு அப்படி ரஜினி மேலே என்ன வன்மம்? என ரஜினி ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ரஜினி ஒரு முறை,” திரையுலகில் எனக்கு போட்டி யாரும் இல்லை நானே எனக்கு போட்டி போட்டிதான் என்றும், நான் விஜய்க்கு போட்டி என்று நினைத்தால் அது எனக்கும் கௌரவமாக இருக்காது, அதேபோல விஜய்யும் நான் அவருக்கு போட்டி என்று நினைத்தால் அது அவருக்கும் கௌரவமாக இருக்காது” என்று சொல்லி இருக்கிறார்.
மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள் என்றால் விஜய் தனது வாழ்த்துக்களை ட்விட்டர் மூலம் தெரிவித்து வருகிறார். இருந்த போதிலும் தனக்கு போட்டியாக இருக்கும் ரஜினிக்கு எதுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என்று இருமாப்போடு இருக்கிறாரா விஜய்? என ரஜினி ரசிகர்கள் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை எடுத்து வைக்கின்றன.