2 வருஷத்துல 600% உயர்வு... ஸ்விக்கியில் சேவைக்கட்டணம் மீண்டும் உயர்வு... பயனர்கள் அதிர்ச்சி!
Dinamaalai August 16, 2025 10:48 PM

ஆன்லைன் டெலிவரி செயலிகளில் முண்ணனியில் இருந்து வரும் நிறுவனம் ஸ்விக்கி. இந்த ஆப்பில் உணவின் விலை அதிகமாக இருப்பதாக பலர் புலம்பத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், ஆன்லைன் உணவு விநியோக பயன்பாடான ஸ்விக்கி தனது பிளாட்ஃபார்ம் கட்டணத்தை மீண்டும் உயர்த்தியதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதன்படி இந்த முறை கட்டணம் ரூ.12-லிருந்து ரூ.14-ஆக உயர்த்தப்பட்டு இருப்பதாக ஸ்விக்கி அறிவித்துள்ளது.  

பண்டிகைக் காலத்தில் அதிகரித்த வாடிக்கையாளர் ஆர்டர்கள் காரணமாக இந்த உயர்வு அமல்படுத்தப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  கடந்த  2023 முதல் உணவு டெலிவரிக்கு ஸ்விக்கி கட்டணம் வசூலிக்கத் தொடங்கியது. அதன்படி, 2023 ஏப்ரலில் ரூ.2 ஆக இருந்த இக்கட்டணம், 2024 அக்டோபரில் ரூ.10 ஆகவும், தற்போது ரூ.14ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் பிளாட்ஃபார்ம் கட்டணம் 600% அதிகரித்துள்ளது.

பண்டிகை காலங்களில் ஆர்டர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், செயல்பாட்டு செலவுகளை ஈடுகட்டவே இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறுகிறது.  சேவையின் தரத்தை மேம்படுத்தவும், தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கு முதலீடு செய்யவும் கட்டண உயர்வு உதவுகிறது. பொருளாதார பணவீக்கம் மற்றும் போட்டியாளர்களின் கட்டண அமைப்புக்கு ஏற்ப ஸ்விக்கி கட்டணத்தை சரிசெய்யப்படுகிறது. இந்த உயர்வு பயனர்களுக்கு குறைந்த அளவு தாக்கத்தையே ஏற்படுத்தினாலும், சேவை தரத்தை பராமரிக்கவும் மேம்படுத்தவும் இது உதவும் என ஸ்விக்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.