தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மாலை நேரங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
நேற்று காலை குற்றாலம் சுற்றுவட்டார மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியில் கனமழை பெய்து குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குற்றாலம் அருவிகளில் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.
நேற்று சுதந்திர தினம், இன்று ஆடி கிருத்திகை, கிருஷ்ண ஜெயந்தி, நாளை வார விடுமுறை என தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்தில் குவிந்துள்ளனர். நேற்று கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து வெளியூரிலிருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில், குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது . அதன்படி மெயின் அருவி , ஐந்தருவி , சிற்றருவி , புலியருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?