Today Roundup: மோடி சுதந்திர தின உரை டு மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை| 15.8.2025
Vikatan August 16, 2025 10:48 PM

நேற்றைய நாளின் (ஆகஸ்ட் 15) முக்கியச் செய்திகள்!

*நேற்றைய 79-வது சுதந்திர தின விழாவில் டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி 103 நிமிடங்கள் பேசிய பிரதமர் மோடி, "ஆர்.எஸ்.எஸ் இந்நாட்டிற்கு 100 ஆண்டுகள் சேவை செய்வது பெருமைமிக்க, பொன்மயமான அத்தியாயம். ஸ்வயம் சேவகர்கள் நமது தாய்நாட்டின் நலனுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர்" என்று 1948, 1975-77, 1992 என மூன்று முறை மத்திய அரசால் தடைசெய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை வெளிப்படையாகப் பாராட்டிப் பேசியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது. (முழுவிவரம்)

*79வது சுதந்திர தின விழாவில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். (முழுவிவரம்)

*நாகாலாந்து மாநில ஆளுநரும், பாஜகவில் மூத்த தலைவராக இருந்தவருமான இல.கணேசன், தனது 80வது வயதில் நேற்று மாலை உடல்நலக் குறைவால் காலமானார். அவரது இறப்பிற்குப் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். (முழுவிவரம்)

இல.கணேசன்

* தமிழ்நாட்டுப் புறவழிச் சாலைகளைப் பயன்படுத்தும் வாகனங்களுக்குச் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முடிவை எடுத்துள்ள தி.மு.க அரசின் முடிவை ஓ.பன்னீர்செல்வம் கடுமையாகக் கண்டித்து, ரத்து செய்யக் கோரிக்கை விடுத்துள்ளார். (முழுவிவரம்)

* தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி குற்றம்சாட்டிப் பேசியதற்கு, "பெண்களுக்கு எதிரான குற்றங்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கும் மாநிலங்களான உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மூன்றுமே பாஜக ஆளும் மாநிலங்கள்" எனப் பதிலடி கொடுத்துப் பேசியிருக்கிறார் தி.மு.க எம்.பி கனிமொழி. (முழுவிவரம்)

*சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே 13 நாள்களாக தனியார்மயமாதலை எதிர்த்தும், பணி நிரந்தரம் கோரியும் போராடி வந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன், 11 மண்டலங்களைத் தனியார்மயமாக்கியது அதிமுக. அதற்கு அதிமுகவின் பதில் என்ன? என்றும் தூய்மைப் பணியாளர்கள் மீது கைது நடவடிக்கை மற்றும் அவர்கள் மீது வழக்குப் போடப்பட்டிருப்பதைக் கண்டிப்பதோடு, அந்த வழக்குகளைத் திரும்பப்பெற வலியுறுத்துகிறோம் என்றும் பேசியிருக்கிறார். (முழுவிவரம் )

ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடும் தூய்மை பணியாளர்கள்

*இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களுக்குச் சொந்தமான படகுகளையும் மீட்கக் கோரி சுதந்திர திருநாளான நேற்று மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். (முழுவிவரம்)

* திண்டுக்கல்லில் இரு ரவுடி கும்பல் இடையே நடக்கும் மோதலால் தொடர் கொலைகள் நடைபெற்றுவரும் நிலையில் கொலை செய்யப்பட்ட ரவுடியை ஹீரோவாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட இளைஞரைக் கைது செய்து காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறது. (முழுவிவரம்)

இந்திய பிரதமர் மோடி - ரஷ்ய அதிபர் புதின்

*பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா தனது ஒரு சிறுநீரகத்தை ஆன்மீக மதகுரு பிரேமானந்த்திற்குத் தானமாகக் கொடுக்க விரும்புவதாகக் கூறியிருக்கிறார் (முழுவிவரம்)

* ரேடியோ நிலையம் ஒன்றிற்குப் பேட்டியளித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தான் இந்தியா மீது கூடுதல் வரி விதித்ததால்தான், ரஷ்ய அதிபர் புதின் என்னைச் சந்திக்க ஒப்புக்கொண்டுள்ளதாகப் பேசியிருக்கிறார். (முழுவிவரம்)

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.