தமிழகத்தில் விடியல் பயணத்தின் மூலம் ரூ.50,000 வரை பெண்கள் சேமித்துள்ளதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதமாக தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த விடியல் பயணத் திட்டத்துக்கு அரசு செலவழிப்பது மகளிர் முன்னேற்றத்துக்கான முதலீடு என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், விடியல் பயணத்தின் மூலம் மகளிர் ரூ.50 ஆயிரம் வரை சேமித்துள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், நமது திராவிட மாடலின் 51 மாதங்களுக்குள் விடியல் பயணத்தின் மூலம் நமது சகோதரிகள் 50 ஆயிரம் ரூபாய் வரை சேமித்துள்ளதும் - அந்தத் திட்டத்துக்கு அரசு செலவழிப்பதும், மகளிர் முன்னேற்றத்துக்கான முதலீடு!” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?