நெல்லூரில் ஆயுள் கைதியுடன் உல்லாசத்தில் இருந்த வீடியோ வெளியான நிலையில் லேடி டான் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லூர் மத்திய சிறையில் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஸ்ரீகாந்துக்கு பரோல் வழங்குவதில் முக்கிய பங்கு வகித்த அவரது காதலி லேடி டான் அருணாவை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீகாந்த் மருத்துவமனையில் இருந்தபோது போலீஸ் காவலை மீறி அருணாவுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியான பிறகு கைது செய்யப்படுவார் என்பதை அறிந்ததும் தனது காரில் அருணா ஐதராபாத் சென்று கொண்டிருந்தார்.
இந்தநிலையில் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள மேதரமெட்லாவில் அவரை போலீசார் நள்ளிரவில் அருணாவின் காரை நிறுத்தி கைது செய்தனர். தனது காரில் கஞ்சா வைத்து தன் மீது பொய் வழக்குகள் பதிவு செய்ய போலீசார் முயற்சிப்பதாக அருணா காரில் இருந்தபடி செல்ஃபி வீடியோ எடுத்து அதை வெளியிட்டுள்ளார். கோவூரில் ஒரு வீட்டை இடித்த சம்பவத்தில் அவர் மீது முன்பு ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது எந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார் என்பது தெரியவில்லை. அருணாவை கோவூர் போலீசார் கைது செய்ததாக கூறப்படுகிறது.