இமாச்சல பிரதேசத்தை அடுத்தடுத்து உலுக்கிய நிலநடுக்கம்.. பீதியில் உறைந்த பொதுமக்கள்!
TV9 Tamil News August 20, 2025 03:48 PM

சிம்லா, ஆகஸ்ட் 20 : இமாச்சல பிரதேசத்தில் (Himachal Pradesh) இன்று (ஆகஸ்ட் 20, 2025) அதிகாலை அடுத்தடுத்து இரண்டு முறைநிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டுள்ளது. அதிகாலை 3.27 மணி அளவில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அதனை தொடர்ந்து சரியாக ஒரு மணி நேரம் கழித்து 4.39 மணிக்கு மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு பொதுமக்கள் கடும் பீதியில் உறைந்துள்ளனர். இந்த நிலையில், இமாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்கள் குறித்தும் அவற்றின் தாக்கம் விரிவாக பார்க்கலாம்.

இமாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்

இமாச்சல பிரதேசத்தின் சம்பா பகுதியில் இன்று (ஆகஸ்ட் 20, 2025) அதிகாலை அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. அங்கு சரியாக காலை 3.27 மணி அளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளாவில் 3.3 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சரியாக காலை 4.39 மணிக்கு அங்கு மீண்டும் ஒருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : நடுவழியிலேயே சிக்கிய மோனோ ரயில்.. 100 பயணிகளின் கதி என்ன? மும்பையில் நடந்த சம்பவம்

ஒரே நாளில் இரண்டு நிலநடுக்கங்கள் – பீதியில் மக்கள்

EQ of M: 4.0, On: 20/08/2025 04:39:45 IST, Lat: 32.71 N, Long: 76.11 E, Depth: 10 Km, Location: Chamba, Himachal Pradesh.
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjcVGs @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/JnF7x53XeK

— National Center for Seismology (@NCS_Earthquake)

இமாச்சல பிரதேசத்தில் இரண்டாவதாக ஏற்பட்ட நிலநடுக்கம், 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது (National Center for Seismology). இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4 ஆக பதிவு செய்யப்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்

இமாச்சல பிரதேசத்தில் ஒரே நாளில் அதிகாலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக அங்கு பொதுமக்கள் கடும் பீதியில் உறைந்துள்ளனர். 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படுவது அபாயகரமானது இல்லை என்றாலும், அங்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த வித தகவலும் வெளி வராமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.