வரும் துணை ஜனாதிபதி தேர்தலில், I.N.D.I.A கூட்டணியின் சார்பில் சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) சார்பில் தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணன் களமிறங்குகிறார். தமிழர் எனும் அடிப்படையில் CPR-க்கு ஆதரவு வழங்க வேண்டும் என பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் திமுக மீது அழுத்தம் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும், திமுக தலைவர் மற்றும் தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் அதனை உறுதியாக நிராகரித்துள்ளார்.
திமுக எப்போதும் மதச்சார்பின்மை, கூட்டாட்சி, சமூக நீதியை ஆதரித்து வருவதாகவும், “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற கொள்கையை பின்பற்றுவதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அந்த அடிப்படையில், சுதர்சன் ரெட்டியின் பார்வையும் திமுகவின் கொள்கைகளுடன் ஒத்துப்போகிறது என்பதால், அவருக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக அவர் வெளிப்படையாக அறிவித்துள்ளார். இது துணை ஜனாதிபதி தேர்தலில் முக்கிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“>