Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
கிரிஷை போர்டிங் ஸ்கூலில் வந்து சேர்க்கிறார் ரோகிணி. எல்லா முடித்து அவரை உள்ளே அனுப்ப கிரிஷ் நான் போக முடியாது. உன்னுடன் தான் இருப்பேன் என்கிறார். அதெல்லாம் முடியாது என ரோகிணி கூற ஏன் முடியாது. நீ முத்து அங்கிள் வீட்டில் தானே இருக்க என அடம் பிடிக்க கிரிஷை அடிக்க கை ஓங்குகிறார் ரோகிணி.
அப்போ வரும் டீச்சர் கிரிஷை சமாதானம் செய்து அழைத்து செல்கிறார். ரோகிணி கிளம்பும் போது அவர் அம்மா அங்கு இருக்க எங்கே போய் தொலைஞ்ச எனக் கத்த அவரும் சத்தம் போடுகிறார். நான் இல்லனா உன் கூட வச்சிப்பேனு தானே விட்டு போனேன் என்கிறார்.
உனக்கு மூளை குழம்பிட்டா நான் எப்படி வச்சிக்க முடியும். அவன் இங்க தான் இருப்பான் என்கிறார். மரியாதையா அவனை உன்கூட அழைச்சிட்டு போ எனக் கூற ரோகிணி அது முடியாது. இப்போ அவனுக்கு பாசத்தோட படிப்பு தான் முக்கியம். இங்க கொஞ்ச நாள் படிக்கட்டும் என்கிறார்.
அவர் அம்மாவிடம் காசை கொடுத்து நீ சித்தி ஊருக்கு போ. நான் பெர்மிஷன் வாங்கி தரப்ப மட்டும் வந்து பாரு என அனுப்பி விட்டு கிளம்பி விடுகிறார். அவர் கவலையாக ரோட்டில் நடந்த பஸ் ஸ்டாண்டிற்கு வர மீனா சீதாவுடன் போன் பேசிக்கொண்டு அங்கு வருகிறார்.
அப்போ, ரோகிணி அம்மாவை பார்த்துவிட ஓடிச்சென்று எங்கு போனீங்க. கிரிஷ் என்ன ஆவானு நினைச்சீங்களா என்கிறார். அவன் அம்மா கூட இருக்கட்டும் தான், விட்டு போனேன் என்கிறார். கிரிஷ் எங்கே எனக் கேட்க அவன் அம்மா கூட சேர்ந்துட்டான்.
நான் மறைச்சிட்டேன். என்னை மன்னிச்சிரும்மா. நீ எனக்கு நிறைய உதவி செஞ்சி இருக்க. நீங்க இல்லனா நான் உயிரோட இருப்பேனானு கூட தெரியாது. இப்போதைக்கு என்னிடம் எதுவும் கேட்காதே எனச் சொல்லிவிட்டு செல்கிறார். கிரிஷ் இப்போ அவன் அம்மாவோட சேர்ந்து விட்டான் என்கிறார்.
அருண் செக்கிங்கில் இருக்க அப்போ செல்வம் தன்னுடைய தோழருடன் வருகிறார். அப்போ ஹெல்மெட் போடாமல் இருப்பதை பார்த்து யோசனையோடு இருக்க செல்வம் அருண் தான் அவங்க கல்யாணத்தை நான்தான் நடத்தி வச்சேன். மரியாதையை பாரு எனச் சொல்லி அழைத்து செல்கிறார்.
ஆனால் அருண் வண்டியை நிறுத்தி ஹெல்மெட் இல்லாமல் வந்ததற்காக ஓரமாக நிற்க சொல்கிறார். செல்வமும் அதிர்ச்சியாக நான் முத்துவோட பிரண்ட் எனக் கூற யாரா இருந்தாலும் ஓரமாக நில்லுங்க என்கிறார். செல்வத்தின் தோழர் லஞ்சம் கொடுக்க பார்க்க அவரை அடித்துவிடுகிறார் அருண்.
பின்னர் வீட்டிற்கு வரும் மீனா, கிரிஷ் பாட்டியை பார்த்தேன் என அங்கு நடந்ததை சொல்ல ரோகிணி அதிர்ச்சியுடன் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.