காலையிலேயே அதிர்ச்சி…!! கால்வாயில் அரசு பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து… 4 பேருக்கு எலும்பு முறிவு உட்பட 22 பேர் காயம்…!!!!
SeithiSolai Tamil August 20, 2025 03:48 PM

மதுரையிலிருந்து ராமேஸ்வரத்தை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தெளிச்சாத்த நல்லூர் என்ற பகுதியில் வைகை ஆற்றின் வலது பிரதான கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இன்று காலை ஏற்பட்ட இந்த திடீர் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விபத்துக்குள்ளான பேருந்தில் பயணம் செய்த 22 பேர் காயமடைந்துள்ளனர். இதில் நால்வருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதுடன், அவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தகவலறிந்ததும் மீட்புப் பணிக்காக கிரேன் மூலம் பேருந்தை மீட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அந்த கிரேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சரிந்ததால் மீட்பு பணிகள் மேலும் சிக்கலாகி, மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் நடந்த இடத்தில் காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

காயமடைந்தவர்கள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதுடன், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.