லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம், காலாவதியான பாலிசிகளை புதுப்பிப்பதற்காக ஒரு சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 18 முதல் அக்டோபர் 17 வரை ஒரு மாத காலத்திற்கு இந்த திட்டம் அமலில் இருக்கும். இந்த சிறப்புத் திட்டத்தின் கீழ், பங்குச்சந்தையுடன் தொடர்பில்லாத தனிநபர் பாலிசிகளுக்கு தாமத கட்டணத்தில் 30% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடியின் அதிகபட்ச வரம்பு ரூ. 5,000 ஆகும்.
கூடுதலாக, மைக்ரோ இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கான தாமத கட்டணத்தில் 100% தள்ளுபடி வழங்கப்படும். பிரீமியம் செலுத்தப்படாமல் ஐந்து ஆண்டுகள் ஆன, குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்ட பாலிசிகளை இந்தத் திட்டத்தின் கீழ் புதுப்பித்துக் கொள்ளலாம்.
பிரீமியம் செலுத்த முடியாததால் காப்பீட்டு பாதுகாப்பை இழந்த வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் பாதுகாப்பை அளிப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று எல்ஐசி தெரிவித்துள்ளது.
Edited by Siva