30 நாட்கள் சிறையில் இருந்தால் 31வது நாளில் பதவி நீக்கம்.. அமித்ஷா தாக்கல் செய்யும் அதிரடி மசோதா..!
WEBDUNIA TAMIL August 20, 2025 03:48 PM

மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று தாக்கல் செய்ய உள்ள மசோதாக்களில் ஒரு பிரதமர் அல்லது முதலமைச்சர் அல்லது அமைச்சர் முப்பது நாட்கள் சிறையில் வைக்கப்பட்டால் அவர் தனது பதவியை 31 வது நாள இழப்பார் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மக்கள் பிரதிநிதிகள் மீது இருக்கும் மக்களின் நம்பிக்கையை பாதுகாக்க இந்த மசோதா என்று கூறப்படுகிறது. தற்போதைய சட்டத்தின்படி, ஒரு எம்பி, எம்எல்ஏ, அல்லது அமைச்சர்கள் தண்டனை உறுதியாகும் வரை காவலில் இருந்தாலும் அவர்கள் பதவியில் இருக்கலாம்.

ஆனால் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு அமலுக்கு வந்த பின்னர் ஒரு குற்றச்சாட்டின் பேரில் அமைச்சர் அல்லது பிரதமரே கைது செய்யப்பட்டாலும் அவர் 30 நாட்கள் சிறையில் இருந்தால், 31வது நாள் அவரது பதவி தானாக பறிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சட்டம் மக்கள் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதாக இருந்தாலும் எதிர்க்கட்சிகள் மீது தவறாக பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.