ஜெய்ப்பூர், ஆகஸ்ட் 20 : ராஜஸ்தானில் (Rajasthan) உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்திய கணவனை அவரது மனைவி தனது ஆண் நண்பருடன் இணைந்து கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரைம் தில்லர் வெப் சீரீஸ்களை பார்த்து இந்த கொலை சம்பவத்தை அவர்கள் அரங்கேற்றியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், கிரைம் திரில்லர் வெப் சீரீஸ்களை பார்த்து, மனைவி தனது கணவனை கொலை செய்தது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
துன்புறுத்திய கணவன் – ஆண் நண்பருடன் இணைந்து மனைவி செய்த கொடூரம்ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் சந்தோஷ் தேவி. இவரது கணவர் மனோஜ். மனோஜ் இ ரிக்க்ஷா ஓட்டி வரும் நிலையில், சந்தோஷ் தேவி பெட்ஷீட் தயாரிப்பு ஆலையில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் சந்தோஷ் தேவியை அவரது கணவர் மனோஜ், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சந்தோஷ் தேவிக்கு, தன்னுடன் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக இருவரும் நெருங்கி பழகியுள்ளனர்.
இதையும் படிங்க : இளைஞருடன் வாழ கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி.. 53 வயது நபரின் கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்கள்!
கணவனை கொலை செய்ய கிரைம் தில்லர் வெப் சீரீஸ் பார்த்து திட்டம்அவர்களுக்கு இடையேயான நட்பு விரிவடைந்த நிலையில், தனது கணவர் தனக்கு செய்த கொடுமைகளை குறித்து சந்தோஷ் தேவி தனது நண்பரிடம் கூறி மனம் வருந்தி உள்ளார். இந்த நிலையில், தனது கணவரை கொலை செய்ய நண்பருடன் சேர்ந்து அவர் திட்டமிட்டுள்ளார். அதன்படி அவர்கள் இருவரும் கொலை செய்வது எப்படி என்பது குறித்து கூகுளில் தேடி உள்ளனர். அதற்கான பதில் அவர்களுக்கு கிடைக்காத நிலையில், கிரைம் திரில்லர் வெப் சீரிஸ்களை பார்த்து கொலை திட்டம் தீட்டியுள்ளனர்.
இதையும் படிங்க : Telangana Crime : மகள் திருமணத்தன்று தாய்க்கு நேர்ந்த சோகம்.. கண்ணீரில் மூழ்கிய கிராமம்
கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட கணவர் – காட்டிக்கொடுத்த சிசிடிவிதிட்டத்தின் படி சந்தோஷ் தேவியின் கணவரை அவரது ஆண் நண்பர் ரிக்க்ஷா வாடகைக்கு அழைத்துள்ளார். செல்லும் வழியில் வேறொரு நபரும் ஆட்டோ ரிக்க்ஷாவில் ஏறி உள்ளார். இருவரும் மனோஜை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்துள்ளனர். பின்னர் தங்களது உடைகளை மாற்றிக்கொண்டு, சிம் கார்டுகளை தூக்கி எறிந்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையின் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.