சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ரயில்வே கிராசிங்கில் கேட் மூடப்பட்டிருந்தபோதும், காத்திருக்காமல் ஒருவர் தனது பைக்கை தோளில் தூக்கிக்கொண்டு தண்டவாளத்தை கடந்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
சுமார் 100 கிலோ எடையுள்ள பைக்கை மிக எளிதாக தூக்கிச் சென்ற இளைஞரை நெட்டிசன்கள் பாகுபலி என பதிவிட்டுள்ளனர். மேலும் சிலர் ரயில்வே கேட்கள் மூடப்படுவதன் நோக்கம் பாதுகாப்புக்காக தானே தவிர இந்த மாதிரியான அசட்டுத்தனமான செயல்கள் விபத்துக்கே வழிவகுக்கும் எனவும் நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த வீடியோ இதுவரை 1,67,000 முறை பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது. இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்து தெளிவான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?