'லவ் டுடே', 'கோட்', 'டிராகன்' ஆகிய திரைப்படங்களின் மூலம் அடுத்தடுத்து வெற்றிகளை அடுக்கியது ஏ.ஜி.எஸ் நிறுவனம்.
'டிராகன்' படத்தைத் தொடர்ந்து, அஸ்வத் மாரிமுத்து சிம்புவை கதாநாயகனாக வைத்து இயக்கும் திரைப்படத்தையும் ஏ.ஜி.எஸ் நிறுவனமே தயாரிப்பதாக அறிவிப்பு வெளியானது.
இதைத் தாண்டி, தற்போது மற்றுமொரு புதிய திரைப்படத்திற்கான பூஜையையும் போட்டிருக்கிறது ஏ.ஜி.எஸ் நிறுவனம்.
நடிகர் அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் இப்படத்தின் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்கள்.
இவர்களைத் தாண்டி, ஜான் கெக்கேன், திலீபன், பவன், அர்ஜுன் சிதம்பரம், விவேக் பிரசன்னா, பாலா ஹாசன் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்கள்.
'லவ் டுடே' படத்தின் வெற்றிக்குப் பிறகு, இளம் இயக்குநர்களுக்கு ஏ.ஜி.எஸ் நிறுவனம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
'லவ் டுடே' திரைப்படத்திலேயே பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குநராக இருந்த சுபாஷ் கே. ராஜ் என்பவர் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் புதிய படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
'கே.ஜி.எஃப்' திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்த இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இத்திரைப்படம் தொடர்பாக, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் கிரியேட்டிவ் புரொடியூசர் அர்ச்சனா கல்பாத்தி, "நாங்கள் எப்போதும் புதிய திறமைகளை அறிமுகப்படுத்துவதிலும், சொல்லப்பட வேண்டிய கதைகளைச் சொல்வதிலும் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
திறமையான நபர்களை நாங்கள் 100% ஆதரிக்கிறோம். மேலும், இயக்குநர் சுபாஷ் கே. ராஜை ஏ.ஜி.எஸ் குடும்பத்திற்குள் வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்" எனப் பதிவிட்டிருக்கிறார்.
Mamitha Baiju: `விஜய், சூர்யா, நிவின் பாலி, பிரதீப் ரங்கநாதன்' - சென்சேஷன் மமிதா பைஜுவின் லைன் அப்!சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR