அதிர்ச்சி.. மேடையில் நடனமாடிக் கொண்டிருந்த இளம்பெண் உயிரிழப்பு.!!
Seithipunal Tamil August 21, 2025 09:48 AM

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபல மெடிக்கல் கடை உரிமையாளரின் மனைவி ஜீவா. இவர் நேற்று நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு சினிமா பாட்டிற்கு உற்சாகமாக நடனமாடி கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அருகிலிருந்தவர்கள் ஜீவாவிற்கு முதலுதவி சிகிச்சை அளித்தும் அவர் கண் முழிக்காததால் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜீவாவை பரிசோததித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் மகிழ்ச்சியாக நடனமாடும் ஜீவா திடீரென தலை சுற்றுவதை போல் தலையில் கை வைத்து விட்டு, அப்படியே மேடையில் மயங்கி விழுந்தவாறு உள்ளது. நடனமாடிக்கொண்டு இருக்கும் போது பெண் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.