இளைஞரை ஷூ காலால் மிதித்து இளம்பெண் கொடூரத் தாக்குதல்... பகீர் வீடியோ!
Dinamaalai August 21, 2025 11:48 AM

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில்  பயங்கர சம்பவம் ஒன்று நடந்து சமூகவலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வெளியான வீடியோவில் துப்பட்டாவால் முகத்தை மூடிய ஒரு பெண் வயலில் தரையில் விழுந்திருந்த ஒரு ஆணின் முகத்தில் கால் வைத்து, கட்டையால்  அடிக்கும் வீடியோ  சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த பெண்ணின் பெயர் ஜோதி. தாக்கப்பட்டவர் அமித் ஆர்யா என அடையாளம் காணப்பட்டார்.  அந்த வீடியோவில் மற்ற ஆண்களும் அந்த இளைஞரை கொடூரமாக தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.  அந்த இளைஞரின் ஆடைகளையும் கழற்றி மானப் பார்வையுடன் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில்  ஜோதி மற்றும் அமித் இருவரும் இன்ஸ்டா  மூலம் நண்பர்களாகியுள்ளனர்.  ஜோதி மீரட்டில் இருந்து அமித்தை பிஜ்னோருக்கு அழைத்துள்ளார். அங்கு ஜோதி மற்றும் அவரது 4 நண்பர்களும் சேர்ந்து அமித்தை தாக்கியுள்ளனர். 

அமித், ஹிட்டாச்சி நிறுவனத்தில் கேஷ் வேன் டிரைவராக பணிபுரிகிறார்.   ஜூலை 11 ம் தேதி, வேலைக்கு அரை நாள் விடுப்பு எடுத்த அமித், அன்றிரவு வரை வீடு திரும்பவே இல்லை. குடும்பத்தினர் 2 நாட்கள் தேடியும் இவர் கிடைக்காமல் போனதால், ஜூலை 13ம் தேதி  அவரது உறவினர் அனுராக் புகார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜூலை 26 ம் தேதி  மீரட் போலீசார் ஜோதி, சச்சின், சோட்டு மூவரையும் கைது செய்துள்ளனர்.  அமித் காணாமல் போனது 39 நாட்களாகி விட்ட நிலையில், அவர் எங்கே இருக்கிறார் என்பது குறித்தும் அதிர்ச்சி மற்றும் கவலை ஏற்பட்டுள்ளது.  இச்சம்பவம் குறித்து போலீசார் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து, பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.